கிராமத்தான் என கிண்டல் செய்தவர்களின் வாயடைக்கும்படி இயக்குனர் பாரதிராஜா இயக்கிய மெஹா ஹிட் திரைப்படம்..!

bharathi-raja
bharathi-raja

பொதுவாக பாரதிராஜா இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் என்று முதற்கண் அவருடைய வணக்கத்தை தெரிவிப்பது மட்டும் இல்லாமல் தான் மண்ணோடும் மக்களோடும் சார்ந்து வாழ்ந்ததை திரைப்படம் மூலம் கூறுவது வழக்கம்தான்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழில் முதன்முதலாக 16 வயதினிலே என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார்.

இவ்வாறு பாரதிராஜா இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் கிராமத்து சாயலில் இருப்பதன் காரணமாக தொடர்ந்து கிராமத்து திரைப்படங்கள் மட்டுமே எடுக்க ஆரம்பித்தார். இதனால் பலரும் அவரை கேலி செய்த நிலையில் அவர் க்ரைம் த்ரில்லரான சிகப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படத்தை உருவாக்கினார்.

இவர் உருவான இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் ஸ்ரீதேவி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமில்லாமல் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது. மேலும் இந்த திரைப்படத்தில்  நடிகர் கமலஹாசன் பெண்களால் பாதிக்கப்பட்ட ஒரு சைக்கோ கில்லராக நடித்திருப்பார்.

மேலும் கமல் ஒரு சைக்கோ என தெரிந்த பின்பும்  ஸ்ரீதேவி அவருடன் நெருக்கம் காட்டுவதை இந்த திரைப்படத்தில் மிக பிரமிக்கும் படி இருந்திருக்கும். மேலும் இந்த திரைப்படம் சுமார் 175 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி கண்டது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாரதிராஜா கிராமத்து திரைப்படம் மட்டும் எடுக்க கூடியவர் என்ற பெயர் அறிந்தது மட்டுமில்லாமல் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும் இந்த திரைப்படத்தின் மூலம் பெற்று விட்டார்.