‘ஜெயிலர்’ படத்தில் விநாயகன் ரோலில் நடிக்க இருந்தது இந்த மெகா சூப்பர் ஸ்டாரா.?

jailer movie
jailer movie

Jailer Movie: ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் விநாயகன் ரோலில் இதற்கு முன்பு வேறு ஒரு பிரபல நடிகர் தான் நடிக்க இருந்தாராம் ஆனால் சில காரணங்களினால் அந்த நடிகரால் நடிக்க முடியாமல் போக பிறகு விநாயகன் கமிட்டாகியுள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பவர் தான் சூப்பர் ஸ்டார்.

அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கம் ஆனால் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் படும் தோல்வியினை சந்தித்தது. எனவே இந்த விமர்சனங்களுக்கு பிறகு ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

10ம் தேதி அன்று வெளியான ஜெயிலர் படம்  தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி நாளுக்கு நாள் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோத வசூலை குவித்து வருகிறது. கண்டிப்பாக ஜெயிலர் படம் 800 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிரேக்சஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்தது. மேலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, மிர்னா மேனன், சரவணன், அறந்தாங்கி நிஷா, மகாநதி ஷங்கர் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தார்.

கேங்ஸ்டர் ரோலில்  மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கனடா நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷேராஃப் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. இவ்வாறு தற்பொழுது வெளியாகி திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் விநாயகன் ரோலில் முதலில் நடிக்க இருந்தது முன்னணி மலையாள நடிகர் மெகா சூப்பர் ஸ்டார் மம்முட்டி தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.