விஜய் டிவியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி சீசன்2. இதில் ஹீரோவாக சித்து மற்றும் ஹீரோயினாக ஆலியா மானசா நடித்த வந்த நிலையில் இடையிலே ஆலியா மானசா வெளியேற தற்போது ரியா என்ற பிரபலம் நடித்து வருகிறார். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணனின் தங்கை பார்வதிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து ஓரிரு நாட்களிலேயே மறு வீட்டு அழைப்பிற்கு வந்த பார்வதிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. அந்த வகையில் தனது அண்ணன் கடையில் வேலை செய்யும் செல்வம் என்பவர் ஒரு தீவிரவாதி என்கின்ற உண்மையை தெரிந்து கொண்ட பார்வதி அண்ணனிடம் சொல்ல சென்றபோது செல்வம் பார்வதியை கடத்தியுள்ளார்.
மேலும் செல்வம் கோவில் திருவிழாவில் பாம் வைப்பதற்காக பார்வதி மேல் பாமை வைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குதிரை பொம்மை அணிவித்து அனுப்பியுள்ளார். ஒருபக்கம் பார்வதியின் அண்ணி சந்தியா பார்வதியை தீவிரமாக தேட முயற்சி செய்து வருகையில் ஒருவழியாக சந்தியா பார்வதியை கண்டுபிடித்துள்ளார்.
பின்பு பார்வதியும் சந்தியாவிடம் செல்வம் ஒரு தீவிரவாதி அவன்தான் என்னை கடத்தியது என்ற உண்மைகளை தெரிவித்துள்ளார். அதனால் சந்தியா உடனே சரவணனுக்கு ஃபோன் செய்ய அந்த போனையும் செல்வம்தான் அட்டன் செய்து அப்போது சந்தியா செல்வம் பற்றிய உண்மைகளை அவரிடமே கூறியுள்ளார். பின்பு செல்வம் தன்னை பற்றிய உண்மை தெரிந்து விட்டது என உஷாராகி தலைமறைவாக பார்க்கிறார்.
செல்வத்தை ஒரு பக்கம் சந்தியா மற்றும் சரவணன் போலீஸ் என அனைவரும் தீவிரமாக தேடி வருகின்றனர் சரவணன் செல்வத்தை பார்க்க செல்வம் அவரது கூட்டாளிகளுடன் சரவணனை சுற்றிவளைத்து சரவணனின் நெற்றிக்கு நேராக துப்பாக்கியை வைத்துள்ளார் இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இத்துடன் இன்றைக்கான எபிசோடு நிறைவடைந்துள்ளது.