Meera mitun speak about nepotism : கடந்த சில தினங்களாகவே மீரா மிதுன் பேசிய பேச்சுதான் சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது, இவர் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும் விஜய் ரசிகர்கள் சூர்யா ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் மனைவி மற்றும் சூர்யாவின் மனைவியை மிகவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக விமர்சித்தார்.
இதை அறிந்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை வெளுத்து வாங்கினார்கள் அது மட்டுமல்லாமல் அவர்களுடன் இணைந்து அஜித் ரசிகர்களும் மீரா மிதுனை கிழித்து தொங்க விட்டார்கள். ஆனாலும் மீராமிதுன் அடங்கிய பாடில்லை. அடுத்தடுத்து வீடியோவை வெளியிட்டு தமிழ் சினிமா பிரபலங்களையே வீதிக்கு கொண்டு வருகிறார்.
இவர் விஜய் சூர்யாவை தரக்குறைவாக பேசியதால் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் விஜய் சூர்யாவுக்கு ஆதரவாக வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள், அந்தவகையில் மீரா மிதுன் நெப்போட்டிசம் பற்றியும் கோலிவுட் மாஃபியா பற்றியும் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது இன்று இன்டர்வியூ செய்யவந்த பிரபலம் ஓடிவிட்டதாகவும் இதிலிருந்து தெரிகிறது ஹாலிவுட் மாபியா எப்படி வேலை செய்கிறது என்று எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பற்றியும் பேசியுள்ளார் அவரைப் பற்றி ஏன் சார் உங்களுக்கு உண்மையைச் சொன்னால் குத்துது குடயுது என கேவலமாக அவரை கிழித்து தொங்க விட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பாரதிராஜா ஏன் விஜய்யை ரிஜக்ட் செய்தார் என்றும், விஜய் ஆடிஷனில் கலந்து கொண்ட ஒரு வீடியோவையாவது வெளியிடுங்கள் பார்க்கலாம் என சவால் விட்டுள்ளார்.
மேலும் இயக்குனர் மணி ரத்தினத்தையும் கிழித்து தொங்க விட்டுள்ளார், மணிரத்னம் இயக்கும் படத்தில் நெப்போட்டிசம் ப்ராடக்ட் இருப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். அக்னி நட்சத்திரம் திரைப் படத்தில் இரண்டு ஹீரோக்கள் நெப்போட்டிசம் தான் எனவும் கூறியுள்ளார்.
இவர் இவ்வாறு பேசியுள்ளது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இது பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது இதற்கு விஜய் தரப்பில் இருந்தும் சூர்யா தரப்பில் இருந்தும் ஏதாவது முடிவு எடுத்தால் மட்டுமே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என தெரிகிறது.
People trying to get an item dance in the movies of #Nepotism #KollywoodMafia group so they are ready to support anything. They have forgotten what happened 3months back to them on media ??? pic.twitter.com/paFgdy8J2h
— Meera Mitun (@meera_mitun) August 5, 2020