கடந்த சில நாட்களாகவே மீராமிதுன் வீடியோ தான் இணையதளங்களில் வைரலாகி வருகிறது, மீரமிதுன் விட்டபாடில்லை அதேபோல் விஜய் ரசிகர்களும் ஓய்ந்தபாடில்லை அந்த அளவு சண்டை வலுத்து போகிறது. மீரா மிதுன் கடைசியாக வெளியிட்ட வீடியோவில், விஜய் ஒரு கோலிவுட் மாபியா எனவும் தாறுமாறாக விமர்சித்தார்.
அதுமட்டுமில்லாமல் பாரதிராஜா ஏன் விஜய்யை ரிஜெக்ட் செய்தார் என ஒரு கேள்வியை எழுப்பினார். இப்படி மீராமிதுன் அடங்காமல் தினமும் ஒரு வீடியோவை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் அந்த வகையில் சற்று முன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கலாச்சார காவலர் வேலையை செய்வதற்கு நீங்கள் யார் என்று தெரியவில்லை எனவும், என் உடை பற்றியும் என்னுடைய பர்சனல் ஹாபிட் பற்றியும் பேசுவதற்கு நீங்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதெல்லாம் இருக்கட்டும் நீங்கள் கலாச்சார காவலர்கள் தான் என்று இருந்தால் உங்களுடைய விஜயின் சர்க்கார் போஸ்டரில் விஜய் தம் அடிக்கும் பொழுது பாமக அதனை எதிர்த்து பேசும் பொழுது நீங்கள் என்ன வேலை செய்தீர்கள் என்று எனக்கு தெரியாது என நினைக்கிறீர்களா.
சரி டிரஸ் பற்றி பேசுகிறீர்களே உங்கள் விஜய் படத்தில் ஹீரோயினாக நடிக்கிற அந்த காலத்தில் சங்கவி முதல் இப்ப இருக்கும் மாளவிகா வரை அவர்கள் போடும் உடையைப் பற்றி உங்களால் ஏன் தைரியமாக பேச முடியவில்லை, தைரியம் இருந்தால் அவர்களைப் பற்றி இதுபோல் பேசுங்கள் பார்க்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் விஜய் எது செய்தாலும் சரி நான் அந்த விஜயின் கோலிவுட் மாபியா குடும்பத்தை பற்றி பேசினால் தவறா, விஜய் இதுபோல் ரவுடிசம் செய்து கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது என கூறியுள்ளார், நான் இதைப்பற்றி தைரியமாக பேசினால் நீங்கள் என்னைப்பற்றி என்ன வேணாலும் பேசுவீர்களா என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது இது எல்லாம் ஃபேன்ஸ் தான் செய்துகொண்டிருக்கிறார்கள் என நான் நினைத்துக்கொண்டிருக்க ஆனால் விஜய் ஃபேன்ஸ் கிளப் ஈசிஆர் ஹெட் சரவணன், லெஃப்ட் பாண்டி ஆகியோர்கள் என்னைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நான் சொல்வது அனைத்தும் உண்மைதான் அதற்கு அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது என கூறியுள்ளார்.
இவர் இவ்வாறு பேசியது சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது அதுமட்டுமில்லாமல் மீண்டும் சமூக வலைதளமே போர்க்களமாக இருக்கிறது. இன்றுவரை மீரா மிதுன் விட்டபாடில்லை விஜய் ரசிகர்களும் விடுவதுபோல் தெரியவில்லை இதற்கு யார் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.