விஜய் தொலைக்காட்சி டிஆர்பிஇல் எப்படியாவது முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முறையும் புதிய புதிய ரியாலிட்டி ஷோ புதிய புதிய ஷோக்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்தது இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடைய நல்ல பிரபலம் அடைந்து வந்தது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் மிகவும் பிரபலமடைந்ததும் உண்டு அதுமட்டுமில்லாமல் கடும் விமர்சனங்களையும் சந்தித்தவர்களும் உண்டு அந்த வகையில் பிக்பாஸில் கலந்து கொண்டு கடும் விமர்சனங்களை சந்தித்தவர்களில் ஒருவர் நடிகை மீரா மிதுன். இவர் சமீப காலமாக தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு தேவையில்லாததை பேசி வம்பை விலைக்கு வாங்குவார்.
அப்படிதான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் சூர்யா என ஒருவரையும் விட்டு வைக்காமல் ஏதாவது பேசி வம்பு இழுத்து வந்தார் அதனால் ரசிகர்கள் மீரா மிதுனை வறுத்து எடுத்து வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் மீரா மிதுன் மோசடி குற்றங்களை செய்து இவர் சிறை வரை சென்று திரும்பியவர்.
இப்படி பல பிரச்சினைகளை மீரா மிதுன் சந்தித்து வருவதால் இவருக்கு பட வாய்ப்பு என்பதே கிடைக்கவில்லை அதனால் பட வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்வதை தவிரு வேறு வழியே இல்லை என வீடியோவை வெளியிட்டார் இதைப் பார்த்த பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய தொடரில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார் அந்தத் தொடரில் கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என மீரா மிதுன் ஒப்புக்கொண்டார்.
பிறகு அடுத்த நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மீரா மிதுன் சென்றுள்ளார் அப்பொழுது அங்கு வந்த தயாரிப்பாளர் இந்த நடிகையா வேண்டவே வேண்டாம் வேறு யாரை வேணாலும் புக் செய்து கொள்ளுங்கள் என ஒரேடியாக கூறிவிட்டாராம் அதற்கு காரணம் அந்த தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர்.
ஏற்கனவே மீரா மிதுன் நடிகர் சூர்யாவை பார்த்து மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார் இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை வசைப்பாடினார்கள் அது மட்டும் இல்லாமல் இதன் நிலையில் தற்போது இந்த தயாரிப்பாளரும் இந்த நடிகையை வேண்டாம் என விரட்டி அடித்துள்ளார் அதனால் கிடைத்த வாய்ப்பும் பறிபோகிவிட்டது என்ற வருத்தத்தில் தற்பொழுது குமுரி குமுரி அழுது வருகிறாராம்.