தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள், என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார் மீரா மீதுன். அதன்பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம், இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பிக் பாஸ் சீசன் 3-லும் பங்கேற்று தனக்கென ஒரு சில ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அரசியலில் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் அவரே கூறியுள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
சமீப காலங்களாக இணையதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கி வந்தார்.
அந்த வகையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு யாராலும் கண்டிடாத வகையில் தன்னை புடவையால் அலங்கரித்து விளக்கேற்றி ஒரு கையில் வைத்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இது நீங்கதானா என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஏன் என்றால் வெளியிடும் புகைப்படம் எப்பொழுதும் கவர்ச்சி கலந்து தான் இருக்கும் ஆனால் இந்த முறை இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளீர்களே என கூறுகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.