8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா மிதுன், இவர் படங்களில் நடிப்பதற்கு முன்பே சூப்பர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். அதன்பிறகு தானாசேர்ந்தகூட்டம் திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே சென்று போட்டியாளர்களை அலற விட்டார், மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவம் என்றே கூறலாம் அந்த அளவு ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்ட அவர்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் முன்னணி நடிகரான சூர்யா மற்றும் விஜய்யை அவதூறாக பேசி பிரபலம் அடையலாம் என நினைத்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்படி முன்னணி நடிகர்களை விமர்சித்து ஆதாயம் தேடும் மீரா தற்பொழுத நயன்தாராவை விமர்சித்துள்ளார்.
ஆர் ஜே பாலாஜி தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தை சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களுடைய வைரலாகி வருகிறது, உடனே அந்த ட்வீட்டை குவாட் செய்த மீரா மிதுன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அந்த பதிவுதான் நயன்தாரா ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
அந்த பதிவில் அவர் கூறியதாவது அடுத்தவ புருஷனை கைக்குள் போட்டுக் கொண்டு இருந்தவளாம் அம்மனா என பச்சை பச்சையாக நயன்தாராவை விலாசி எடுத்துள்ளார், உடனே நயன்தாரா ஃபேன்ஸ் சும்மா இருப்பார்களா மீரா மிதுனை கெட்டவர்த்தையால் அபிஷேகம் செய்து வருகிறார்கள்.
A woman in relationship with a married man is doing the role of our hindugod "Amman",does she even know who "Amman" is ?!All this nonsense shameless casting insulting our hindu god happens only in tamilnadu by these worthless #kollywood people.Won't tamil leaders open mouth now https://t.co/C6syIWOGoG
— Thamizh Selvi Mani (@meera_mitun) November 2, 2020