வின்னை தாண்டி வருவாயா சிம்பு திரிஷா ரேஞ்சுக்கு அட்ராசிட்டி பண்ணும் மீரா மிதுன்.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்

meera mithun 3

சர்ச்சை நடிகையாகவும் மாடலாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மீரா மிதுன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதற்கு முன்பு இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அதோடு மடலிங்காகவும் பணியாற்றிய சில விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஆனால் எதுவும் அவருக்கு பெரிதாக பிரபலத்தை தரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் சேரன் இவரை தப்பாக தொட்டு விட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதிலிருந்து தொடர்ந்து தற்பொழுது வரையிலும் சர்ச்சை கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்தவகையில் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யாவின் இவர்களின் மனைவியைப் பற்றி தவறான பல விஷயங்களை கூறியிருந்தார். இவருடைய தொடர்ந்து அனைத்து நடிகைகளும் எனது முகத்தைப் திருடுகிறார்கள் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

தற்பொழுது மீரா மிதுன் தனது வாழ்க்கை வரலாறு பற்றி குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறாராம். இத்திரைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலை சில காலங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து இரண்டாவது பாடலை பற்றி பல நாட்களாக கூறி வருகிறார்.

அந்தவகையில் மீரா மிதுன் சிம்பு,திரிஷா நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் பாடல் ரேஞ்சுக்கு இருக்கும் என்று கூறி வருகிறார். ஆனால் தற்பொழுது வரையிலும் இப்பாடலை கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை எனவே ரசிகர்கள் இவரை மிகவும் பங்கமாக திட்டி வருகிறார்கள்.

meera
meera