2017 ஆம் வெளிவந்த 8 தோட்டாக்கள் என்ற திரை படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா மிதுன்.இதனை தொடர்ந்து அவர் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் போதைஏறி புத்திமாறி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து அவர் விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார் மீரா மிதுன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சேரன் மீது குற்றச்சாட்டை எழுப்பினார், ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், மட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பல போட்டியாளர்களுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் மீரா மிதுனுக்கு மட்டும் பட வாய்ப்பே கிடைக்கவில்லை, ஒரே ஒரு பட வாய்ப்பு கிடைத்தது அதுவும் கைமீறிப் போய்விட்டது.
இந்த நிலையில் பாலிவுட் பக்கம் செல்ல போகிறேன் என மீரா மிதுன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.இது சாதாரணமான புகைப்படமாக இருந்தாலும்,இதையும் கிண்டல் செய்துவருகிறார்கள் ரசிகர்கள்.