விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அவர்களில் ஒருவர் மீரா மிதுன் , இவர் இயல்பாகவே பல சர்ச்சைகளை சந்தித்தவர், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அங்கும் பல சர்ச்சைகளை உருவாக்கினார்.
அதேபோல் பிக்பாஸில் கலந்து கொண்டவர்களில் இயக்குனர் சேரனும் ஒருவர் இவர் தவறாக தன்னிடம் நடந்துகொண்டதாக மீராமிதுன் குற்றம்சாட்டினார், இதற்கு பலரும் மறுப்பு தெரிவித்தார்கள் அதுமட்டுமில்லாமல் அப்படி நான் எதுவும் சொல்லவில்லை என அந்தர் பல்டி அடித்தார் மீரா மிதுன்.
மீரா மிதுன் மாடலிங் ஆர்டிஸ்ட் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 சீசன் எட்டில் கலந்துகொண்டார், அதன் பின்புதான் சினிமா பக்கம் உள்ளே சென்றார், பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு பலரும் தங்களது வேலையை தொடங்கி விட்டார்கள், அதேபோல் பலருக்கு பட வாய்ப்பும் கிடைத்துள்ளன.
ஆனால் மீரா மீதுனுக்கு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை, ஆனால் இவருக்கு சர்ச்சைக்கு மட்டும் பஞ்சமே இல்லை, ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை வெளியிட்டு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.
இந்தநிலையில் மீராமிதுன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால்அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் தாலி அணிந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு உண்மையாலும் திருமணம் ஆகிவிட்டதா என குழப்பத்தில் இருக்கிறார்கள், மேலும் இது உண்மையாக தாலி கட்டியதா அல்லது படப்பிடிப்பின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமா என தெரியவில்லை. இருப்பினும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.