நடிகை மீர மிதுன் இந்திய மாடல் அழகியாவார், இவர் இயல்பாகவே பல சர்ச்சைகளை சந்தித்தவர், அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் மூன்றாவது சீசனில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார், பிக்பாஸ் வீட்டிலேயும் இவர் பல சர்ச்சைகளை உருவாக்கினார்.
பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைகளை உருவாக்கியதால் பாதியிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிரபலங்களுக்கு படவாய்ப்புகள் அமைந்த நிலையில் மீரா மிதுனுக்கு மட்டும் எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.
ஒரே ஒரு பட வாய்ப்பு அமைந்தது ஆனாலும் அந்தப் பட வாய்ப்பு கை நழுவி போனது, உடனே நான் பாலிவுட் சினிமாவில் இருக்க வேண்டியவள் என பாலிவுட் பக்கம் சென்றார் அங்கும் படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை அதனால் எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் ஆண் நண்பருடன் இவர் போட்ட ஆட்டம் ரசிகர்களைத் முகம் சுளிக்க வைத்தது, மேலும் சமீபகாலமாக இவர்களிடம் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர் புடவையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்களை பார்த்து சிலர் நல்லா இருக்கே என கூறினாலும் பலரும் இதயும் பார்த்து விமர்சித்து வருகிறார்கள்.