மீரா மிதுன் தூண்டிலில் சிக்கிய கெளுத்தி மீன் போல் விஷால்.! இதோ வைரலாகும் ஆடியோ ஆதாரம்

vishal-meera-mithun
vishal-meera-mithun

meera mithun audio : சமூக வலை தளத்தில் கடந்த சில நாட்களாகவே மிகவும் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது மீராமிதுன் விஷயம்தான், பிக் பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது மீராமிதுன் பல சர்ச்சைகளை உருவாக்கினார், அதன் பிறகு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் இவர் அடங்குவதாக தெரியவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் மனைவி சங்கீதாவையும் சூரிய மனைவி ஜோதிகாவையும் மிகவும் கீழ்த்தரமாக பேசி அதன் மூலம் ஆதாயம் தேடி வந்தார் மீரா மிதுன், அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினியையும் விட்டு வைத்ததில்லை அவரைப் பற்றியும் மோசமாக கருத்து தெரிவித்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்,.

இருந்தாலும் மீரா மிதுன் மீது விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கொல காண்டில் இறந்தார்கள், இந்த நிலையில் மீரமிதுன் அவருக்கு எதிராக பல சினிமா பிரபலங்கள் தங்களது கருத்தையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள், அந்த வகையில் மீராமிதுனின் பழைய மேனேஜராக பணியாற்றிய வெங்கட்ராமன் மீராமிதுன்  பேசிய பல்வேறு ஆடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெங்கட்ராமன் மீரா மிதுன் விஷால் குறித்து பேசவும் ஆடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த ஆடியோ பதிவில் மறுமுனையில் மீராமிதுன் என்னுடைய அம்மாவிற்கு நான் விஷாலை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசை.

அதேபோல் விஷாலும் 2,3 வருடங்களாக என்னுடைய அம்மாவிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான், ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை எனக்கு மிகவும் பணக்கார பையன் தேவை இல்லை என்னை நன்றாக வைத்துக் கொள்ளும் சாதாரணமான பையன் கிடைத்தால் போதும் நான் யாரிடம் மிகவும் சவுகரியமாக இருக்கிறானோ அவன் உடன் இருந்தால் போதும் என மீராமிதுன் பேசியுள்ளார்.

இந்த ஆடியோ சமூக வளைதளத்தில் மிகவும் தீயாக பரவி வருகிறது.

அதேபோல் இதற்க்கு முன் சிம்புவுடன் இருக்கும் புகைபடத்தை மீரமிதுன் பகிர்ந்தார் அப்பொழுதும் சிம்பு காதலித்தார் என மீரா மிதுன் கூறினார், இப்போழுது விஷால் அடுத்து யாரா இருக்கும் என ரசிகர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.