தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் மீராஜாஸ்மின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தவர். இவர் தமிழில் முதன்முதலாக மாதவன் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகிய ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் மக்களிடமும் ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது அதனால் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள்.
அந்த வகையில் தமிழில் பாலா, புதியகீதை, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்தை கஸ்தூரிமான், சண்டக்கோழி, பரட்டை என்கின்ற அழகு சுந்தரம், நேபாளி என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வந்தார் ஒரு காலகட்டத்தில் தமிழில் பட வாய்ப்பு அமையாததால் மலையாள பக்கம் தனது ஆதிக்கத்தை செலுத்தினார்.
மீரா ஜாஸ்மின் அவர்கள் நீண்ட வருடமாக சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தார் ஆனால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஆம் மீரா ஜாஸ்மின் இயக்குனர் சத்யன் அந்திக்காட் என்பவருடைய படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
சத்யன் அந்திக்காட் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் மீரா இணைந்து நடிக்க இருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு பிறகு மீரா ஜாஸ்மின் சினிமாவில் நுழைவதால் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மீராஜாஸ்மின் பூமரம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய தோட்டத்தில் நடித்திருந்தாலும் ஒரு திரைப்படத்தில் முழுநீள கதாபாத்திரத்தில் நடித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.
சத்யன் இயக்குனர் மீது பலரும் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள் ஏனென்றால் அவர் இயக்கிய திரைப்படங்கள் பல திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாக காணப்பட்டார்.
ஆனால் மீண்டும் படத்தில் நடிக்கப் போவதை அறிந்து மீராஜாஸ்மின் அதிரடியாக உடல் எடையைக் குறைத்துள்ளார் இப்பொழுது உள்ள இளம் நடிகைகளேயே தூக்கி சாப்பிடும் அளவிற்கு உடை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன.