விழா மேடையில் அஜித்தை அவமானப்படுத்திய மீனாவின் அம்மா – அதுக்குன்னு இப்படியா சொல்றது.. உண்மையை உடைத்த பத்திரிகையாளர்.!

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இருப்பினும் அந்த ரசிகர்களை வைத்து இவர் எந்த ஒரு ஆதாயமும் பார்க்காமல்  தான் உண்டு தான் வேலை உண்டு என இருக்கிறார் இருப்பினும் ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். காரணம் சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி  அஜித் எப்பொழுதுமே நேர்மையாக இருப்பது..

மேலும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும், தன்னை தேடி வருபவர்களுக்கும் உதவிகளை வாரி வழங்குவது, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் ஒரே மாதிரியான பாசத்தை வெளிப்படுத்துவது மேலும் தனது ரசிகர்களுக்கு அவர் சொல்வது படத்தைப் பிடித்திருந்தால் பாருங்கள் இல்லை என்றால் உங்கள் வேலை உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் என இவர் சொல்வது ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்வதாக இருப்பதால் நாளுக்கு நாள் அவரை பின்பற்றுவது எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஒரு கட்டத்தில் இதை உணர்ந்த அஜித் இனி தனது ரசிகர்களுக்காக படத்தை கொடுக்க வேண்டும் என கருதி இப்பொழுது வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் வலிமை படத்தை தொடர்ந்து தனது 66வது திரைப்படமான துணிவு படத்தில் அஜித் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் படம் பொங்கலை முன்னிட்டு வெளி வருவதால் அடுத்த பொங்கல் தல பொங்கல் தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் மேலும் துணிவு திரைப்படம் நிச்சயமாக அஜித் கேரியரில் மிகப்பெரிய ஒரு பெஸ்ட் படமாக இருக்கும் என இப்பொழுதே சொல்லி வாழ்த்தி வருகின்றனர்..

திரை உலகில் இப்பொழுது ஜொலிக்கும் அஜித் குமார் ஆரம்ப காலகட்டத்தில்  பல அசிங்கங்களையும், அவமானங்களையும் சந்தித்து இருக்கிறார் அதில் ஒன்றை தான் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஏறி வெளிப்படையாக கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.. அஜித் ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்திருக்கிறார் அதில் ஒன்றாக ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் மீனாவுடன் அஜித் நடித்திருப்பார் இந்த படம் வெளியாகின..

பிறகு ஒரு அவார்டு விழாவின் பொழுது அஜித் சிறந்த நடிகருக்கான விருதை வாங்கினார் அந்த விருதை மீனா கொடுத்தார். பிறகு நீங்கள் இருவரும் மேடையிலேயே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுங்கள் என கேட்டுக்கொண்டனர். உடனே மீனாவின் அம்மா இடையில் குறுக்கிட்டு எனது மகள் ரஜினி, கமல் போன்றவர்களுடன் நடித்துள்ளார் எப்படி நீங்கள் ஆட சொல்லலாம் என கோபப்பட்டு அங்கிருந்து மீனாவை அழைத்துக் கொண்டு போனார்கள் இது அஜித்திற்கு அங்கு பெரிய அவமானத்தை கொடுத்ததாம்..