மேடையில் அஜித்தை அவமானப்படுத்திய மீனாவின் அம்மா.! பெருந்தன்மையாக நடந்துக் கொண்ட தல.. இதுதான் கர்மா

meena
meena

Ajith kumar; நடிகர் அஜித்தை மீனாவின் அம்மா மிகவும் மோசமாக அவமானப்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தை அவமானப் படுத்துவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என கொந்தளித்து உள்ளனர். தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் அறிமுகமாகி பல அவமானங்களுக்கு மத்தியில் வளர்ந்து தற்பொழுது தவிர்க்க முடியாத ஸ்டாராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்.

இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றினை கண்டு வரும் நிலையில் இவரை நடிகை மீனாவின் அம்மா இமேஜை காரணம் காட்டி ஒதுக்கிய சம்பவம் பேசும் பொருளாக இருந்து வருகிறது. நடிகர் அஜித் சினிமாவிற்கு அறிமுகமாகிய வளர்ந்து வந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் தான் மீனா.

அந்த நேரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அஜித்துக்கு விருது வழங்க அவரை மேடைக்கு அழைத்தார்கள். அப்பொழுது இருவரையும் சேர்ந்து டான்ஸ் ஆடும் படி கேட்க உடனே அதற்கு மீனாவும் ஓகே என கூறியிருப்பார். ஆனால் இதனை பார்த்த மீனாவின் அம்மா உடனே கோபமடைந்து மீனாவை ஆடக்கூடாது என்று கூறியிருப்பார். அதோடு மட்டுமல்லாமல் அஜித் ஒரு சாதாரண நடிகர் அவருடன் நடித்தால் இமேஜ் போய்விடும் என்று கூறியிருக்கிறார்.

இதனை கேட்ட அஜித் இட்ஸ் ஓகே என்று பெருந்தன்மையாக கூறி மேடையில் இருந்து இறங்கினார். இவ்வாறு ஒரு கட்டத்தில் மீனாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் இந்த சமயத்தில் இதனை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத அஜித் தனது படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை கொடுத்துள்ளார். அந்த வகையில் மீனா அஜித்துடன் இணைந்து வில்லன், சிட்டிசன், ஆனந்த பூங்காற்றே, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மீனாவிற்கு அஜித் வாய்ப்பு கொடுத்து காப்பாற்றிய நிலையில் இது மீனாவின் அம்மாவிற்கு பெரும் அவமானமாக இருந்திருக்கும். நடிகை மீனாவின் அம்மா தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி சில திரைப்படங்களில் மோசமான கவர்ச்சியான உடை அணிந்து நடித்திருப்பார். இவருடைய தங்கையும் இவருக்கு மேல் கவர்ச்சியில் அர்வம் உடையவர் இப்படிப்பட்ட இவர்கள் அஜித்தை எப்படி அவமானப்படுத்தலாம் இவர்களுக்கென்ன தகுதி இருக்கு என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பொங்கி எழுந்து வருகின்றனர்.