தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஹீரோயின்னாக மாறி சினிமாவில் வெற்றி மேல் வெற்றியை கண்டவர் நடிகை மீனா. நடிகை மீனா ரஜினி, பிரபு, சத்யராஜ், அஜித், விஜய் போன்ற நடிகரின் படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார். சினிமா உலகில் வெற்றி மட்டுமே கண்டு வந்த மீனா ஒரு கட்டத்தில் திருமண விஷயத்தில் ஈடுபட்டார்.
நடிகை மீனா பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார் அவரும் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். இப்படி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த மீனாவுக்கு நிஜ வாழ்க்கையில் பிரச்சனை ஆரம்பித்தது.
மீனாவின் கணவர் வித்தியாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் திடீரென அவர் இறந்து போனார் இது சினிமா துறையினரை ஆட்டம் காண வைத்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து இன்னும் சரியான தகவல்கள் வெளிவரவில்லை…
ஆனால் ஒரு சில தகவல்கள் மட்டும் வெளி வருகின்றன அதாவது அவருக்கு நுரையீரலில் பாதிப்பு இருந்தது. அதனால் புறா எச்சம் உள்ள காற்றை அவர் சுவாசித்திருக்கலாம் அதனால் அவர் இறந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது. இப்படி இருக்கின்ற நிலையில் கலா மாஸ்டர் பேட்டி ஒன்றில் மீனா கணவர் மரணத்திற்கு என்ன காரணம் என சொல்லி உள்ளார்.
பாம்பேவில் புறா எச்சம் இருந்தால், சுவாசித்தாலே தவறு என சொல்வார்கள் பெங்களூரில் அது நிறைய இருக்கிறது இப்படி லட்சத்தில் ஒருவருக்கு தான் infection அது சாருக்கு வந்து விட்டது என கலா மாஸ்டர் வெளிப்படையாக கூறியுள்ளார். இச்செய்தி இணையதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.