நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் என்ட்ரி கொடுத்து பின் நடிகையாக விசுவரூபம் எடுத்தவர். இவர் ரஜினியின் முத்து திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் டாப் ஹீரோக்களுடன் நடித்த தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார்.
இப்படி சினிமாவில் வெற்றியை மட்டுமே ருசித்து ஓடிக்கொண்டிருந்த மீனா ஒரு கட்டத்தில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவரும் தற்போது தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வருகிறார்.
இப்போது மீனாவும் ரீஎன்ட்ரி கொடுத்து படங்களில் நடித்து வருகிறாராம் அண்மையில் கூட நடிகை மீனா சில வருடங்கள் கழித்து நடிகர் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவிலும் நிஜ வாழ்விலும் சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துள்ளதாக கூறப்படுகிறது இவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்ததாம் அதற்காக அடிக்கடி ஹாஸ்பிடலுக்கு எல்லாம் போய் வந்தார்
ஆனால் நுரையீரல் ரொம்ப டேமேஜ் ஆனதால் வேறு வழி இல்லாமல் அதை மாற்றும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர் திடீரென அவர் இறந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் மீனாவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர் மேலும் இந்த செய்தி தற்போது தீயாய் பரவி வருகிறது.