80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை மீனா அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருந்து வந்துள்ளார் நடிகை மீனா. இவர் 1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு கதாநாயகியாக நடித்து வந்தார்.
மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் அதிலும் தமிழில் முன்னணி நடிகர்கள் ஆன கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, அஜித், உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மீனா அவர்கள் நடித்துள்ளார் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை மீனா அவர்கள் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக கோடிகளை குவித்தது.
இதற்க்கு இடையில் நடிகை மீனா வித்யாசாகர் என்பவரே 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவருக்கு நைனிகா என்ற ஒரு மகளும் உள்லார் இவரும் தற்போது சினிமாவில் அறிமுகம் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்தியாசாகர் ஒரு சில ஆண்டுகளாக நுரையீரல் பிரச்சனையின் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அப்போது கொரோனாவின் தாக்குதலால் மேலும் உடல்நிலை சரியில்லாமல் போனது அதன் பிறகு மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மீனாவின் கணவர் வித்தியாசாகர் இருந்தபோது இறுதி சடங்கு செய்வதற்கு பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இறுதி சடங்கு செய்ய நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாவிர்க்கு ஆறுதலுக்கு அவர்களுடைய தோழிகள் தான் இருக்கிறார்கள் சமீபத்தில் கூட மீனா தன்னுடைய தோழிகளான சங்கவி, ரம்பா, சங்கீதா உள்ளிட்டருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.
மீனாவின் தோழிகள் அவபோது மீனாவை சந்தித்து ஆறுதல் கூறிய வருகின்றனர் இப்படி ஒரு நிலையில் நடிகை மீனாவின் 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றவர்கள். கணவரை இழந்த பின் மீனா அவர்கள் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதை கொண்டாடும் விதமாக ரம்பா, கலா மாஸ்டர், சினேகா பலரும் நடிகை மீனாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சினேகாவின் அக்கா கீதா அவர்கள் மீனாவின் பிறந்தநாளைக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.