இளம் நடிகை போல் மடமடவென வளர்ந்துள்ள மீனாவின் மகள்.! வைரலாகும் புகைப்படம்

meena

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 80 மற்றும் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். அது மட்டுமல்லாமல் அஜித், விஜய், ரஜினி, போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்றவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு  மீனாவின் கணவர் வித்யாசாகர்  புறாக்கள் எச்சத்தினால் வந்த நோயால் உயிரிழந்தார். அதன் பிறகு நடிகை மீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகை மீனா தனது மகளான நைனிகாவுடன் இணைந்து க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தமிழ் சினிமாவில் முன்னே நடிகராக இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகா அந்தத் திரைப்படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் தனது அம்மாவுடன் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி வரும் நைனிகா தனது அம்மா மீனா உடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

meena
meena
meena