“ஆடுகளம்” படத்தில் நடிக்க எனக்கு முதலில் விருப்பமே இல்லை.. வெற்றிமாறன் கட்டாய படுத்தியதால் நடித்தேன் – பல வருடம் கழித்து சொன்ன நடிகை.!

vetrimaran

சினிமா உலகில் ஒரு சிலர் தனது படம் லாபத்தை ஈட்டினால் போதும் என இருக்கும்  இயக்குனர்கள் மத்தியில் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் தனது படங்களில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் அந்தப் படம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைக்க  வேண்டும் அதே சமயம் விருதுகளை அல்ல வேண்டும் என்ற முனைப்பில் படத்தை எடுத்து வருகிறார்.

அவரது படங்கள் விருதுகளை அள்ளி குவிகின்றன குறிப்பாக நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இணையும் படங்கள் தேசிய விருதை எல்லாம் அசால்டாக அள்ளி விடுகின்றன. இப்பொழுது இயக்குனர் வெற்றிமாறன் தனுஷிடம் இருந்து நழுவி முதல் முறையாக நடிகர் சூர்யாவுடன் கை கோர்த்து வாடி வாசல் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்திற்கு முன்பாக வெற்றிமாறன் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர்களை வைத்து விடுதலை என்ற படத்தை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஆடுகளம் இந்த படத்தில் தனுசை தாண்டி மற்றவர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அந்த வகையில் வேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் ஜெயபாலனும் அவருக்கு மனைவியாக மீனாள் என்பவரும் நடித்திருப்பார். இந்த நிலையில் நடிகை மீனாள் ஆடுகளம் படம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது : எனக்கு முதலில் ஆடுகளம் படத்தில் நடிக்க விருப்பமில்லை.

meenaal
meenaal

ஆனால் வெற்றிமாறன் நான் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார் படத்தின் கதையை அவர் முழுவதும் சொன்ன பிறகுதான் எனக்கு ஆடுகளம் படத்தில் நடிக்கும் எண்ணமே வந்ததாக கூறினார் வெற்றிமாறன் படத்தில் நடித்தால் அந்த நடிகர் நடிகர்களுக்கு நல்ல வரவேற்பு சினிமா உலகில் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.