ஒரு தடவை ரெண்டு தடவை இல்ல பல தடவை இதே போல் தான் நடந்தது – மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை.!

meenachi-ponnunga
meenachi-ponnunga

வெள்ளிதிரையில் எப்படி போட்டிகள் இருக்கிறதோ அதேபோல சின்ன திரையில் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க பல சேனல்கள் போட்டி போடுகின்றன இதனால் ஒவ்வொரு சேனலும் புதிய புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது அதில் ஒன்றாக பிரபலமடைந்த சீரியல் என்றால் அது மீனாட்சி பொண்ணுங்க தான்..

இந்த சீரியலின் மையக்கரு என்னவென்றால் ஆண் துணை இல்லாமல் தனது மூன்று பெண்களையும் வளர்த்து ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வருவது தான் கதை மீனாட்சி கதாபாத்திரத்தில் அர்ச்சனா நடித்து வருகிறார். இவர் வெள்ளித் திரையில் பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த சீரியலில் மூன்று பெண்களில் ஒருவராக நடித்தவர் மோக்ஷிதா..

இவர் கன்னடத்தில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்தார் இது தான் அவருக்கு தமிழில் முதல் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திடீரென இந்த சீரியலில் இருந்து அவர் விலகி உள்ளார் இது குறித்து சமீபத்தில் அவரே விலாவாரியாக பேட்டி கொடுத்துள்ளார்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்க என்னிடம் கேட்ட பொழுது கன்னடத்தில் நான் ஒரு சீரியல் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன் செம்பருத்தி கன்னட வெர்ஷன் நல்லா போய்க்கொண்டிருக்கிறது பின் மாதம் 15 நாட்கள் கால் சீட் என்று பிரித்துக் கொடுத்து இரண்டு சீரியல்களிலுமே கமிட் ஆகி நடித்து வந்தேன்.

இந்த சீரியல் தொடங்கி கொஞ்ச நாள் தான் ஆனது ஆனால் நல்ல வரவேற்பு கிடைத்தது நன்றாக போய்க் கொண்டிருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை திடீரென கதை மாறுகிற மாதிரி எனக்கு தெரிந்தது இதனால் எனக்கு உடன்பாடு இல்லை கமிட் செய்கிறப்ப சொன்னதுக்கும் அதன் பிறகு இயக்குனர் கதையை மாற்றுவது எனக்கு பிடிக்கவில்லை நான் இந்த சீரியலில் ஆசை ஆசையாக நடிக்க வந்தேன்.

இப்படியெல்லாம் நடந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது ஆனாலும் அதை வெளி காட்டாமல் எல்லாத்தையும் பொறுத்து கொண்டு நடித்துக் கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் ஷூட்டிங் தேதிக்கும் பிரச்சனை வந்தது ஆரம்பத்தில் சொன்ன மாதிரி மாதம் 15 நாள் என்று தான் நான் ஒதுக்கி தந்தபடி சூட்டிங் அமையவில்லை..

meenachi-ponnunga
meenachi-ponnunga

ஷூட்டிங் என்று சென்னைக்கு வரும் பொழுது சில நாட்கள் எனக்கு சூட் இருக்காது. அந்த நாட்கள் எல்லாம் சும்மா தான் இருப்பேன் ஆனால் இங்கு இருந்து கிளம்பி பெங்களூருக்கு போன மறுநாளே ஷூட்டிங் இருக்கிறது என்று வர சொல்வார்கள் இதனால் என்னோட கன்னட சீரியல் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் நடந்து கொண்டே இருந்ததால் வேறு வழி இல்லாமல் இந்த தொடரில் இருந்து நான் வெளியேறினேன் என கூறினார்.