லிங்கா திரைப்படத்தில் ரஜினியுடன் மீனா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

rajine

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் ரஜினி இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா,குஷ்பூ, நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லிங்கா இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என படக்குழுவினர்கள் நம்பி வந்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்றுதான் கூற வேண்டும் அதற்கு காரணம் இந்த படத்தின் கிளைமாக்ஸ் சீன் சுதப்பிவிட்டது.!

மேலும் அந்த திரைப்படத்தின் படபிடிப்பின் போது ரஜினியுடன் நடிகை மீனா புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மீனா இந்தப் புகைப்படத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறார் என வர்ணித்து வருகிறார்கள் ஆனால் இவர் எப்பொழுது ரஜினியின் படப்பிடிப்பு தளத்தில் சென்றார் என்பது தான் தெரியவில்லை என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

rajine and meena
rajine and meena