அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட மீனா.! சரியாக பயன்படுத்தி வளர்ந்த இடுப்பழகி.. எந்த படம் தெரியுமா.?

meena
meena

Meena : நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் நடிப்பில் கடைசியாக துணிவு என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கண்டது. இந்நிலையில் அடுத்ததாக அஜித் விடா முயற்சி என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தைக் மகிழ்த்திருமேனி இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது. இந்த படத்தின் டைட்டிலைத் தவிர படத்தில் அஜித்துடன் இணைந்து யார் யார் நடிக்கப் போகின்றனர் என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை..

ஆனால் விடாமுயற்சி படத்தின் அப்டேட்காக அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித்தின் ஆரம்ப கால கட்டத்தில் அவரது கேரியரை உயர்த்திய முக்கிய படங்களில் ஒன்று வாலி. இந்த படம் 1999 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் தேவா இசையில் வெளிவந்தது.

வாலி படம் அஜித்திற்கு ஒரு திருப்புமுனை படமாக மாறியது. இந்த படம் இன்றும் அஜித் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் வாலி படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாங்க சிம்ரன் நடித்திருப்பார் மேலும் இரண்டாவது ஹீரோயின் ஆக சின்ன கதாபாத்திரத்தில் ஜோதிகாவும் நடித்திருப்பார்.

சிம்ரன் நடிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இந்நிலையில் வாலி படத்தில் சிம்ரனுக்கு பதில் முதல் முதலில் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டது மீனா தானாம். ஆனால் சில காரணங்களால் மீனா இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக பின்பு சிம்ரன் நடித்து ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்துள்ளார்..