சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் அஜித். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பதால் இவருக்கான ரசிகர் கூட்டமும் அதிகரித்துள்ளதோடு சினிமா உலகில் இருக்கும் புதுமுக நடிகர் நடிகைகள் கூட இவருக்கு தீவிர ரசிகராக மாறிவிடுகின்றனர்.
இதனால் அஜித் படத்தில் நடிக்க பல இளம் தலைமுறை நடிகர்கள் நடிகைகள் பலரும் போட்டு போட்டுகொண்டு நடிக்க காத்துக்கொண்டு இருகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் நடித்த நடிகையான அபி என்கின்ற அபிதா அஜித்தின் படத்தை வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு போயுள்ளார்.
2011ம் ஆண்டு சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் என்ற திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தில் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா போன்ற பல முன்னணி நடிகைகள் நடித்திருந்தனர் மேலும் இந்த படத்தில் அஜித் பல கேட்டப்களை போட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளார் அஜித்.
இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும் நல்லதொரு எதிர்காலம் சினிமாவில் அப்போது இருந்தது. அதிலும் குறிப்பாக மீனாவின் கதாபாத்திரம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் அவரது நடிப்பு இந்தப் படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் கமீட்டாக இருந்தது பிரபல நடிகை அபிதா தான்.
ஆனால் இவர் கதையை கேட்டு மறுத்தார் பின் அவரை தூக்கி விட்டு மீனாவிற்கு அந்த வாய்ப்பை கொடுத்தனர். அபிதா முதலில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தில் தான் நடித்தார் அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து அடுத்ததாக சிட்டிசன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அதை உதறி தள்ளிவிட்டு சினிமா அதில் பயணித்த ஆனால் அது அவரை நீண்ட தூரம் அழைத்துச் செல்லாமல் உதறித் தள்ளியது அதன்பிறகு இவர் சின்னத்திரை பக்கம்நுழைந்து வெற்றி கண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.