இன்று பிறந்தநாள் காணும் கண்ணழகி மீனாவின் சொத்து மதிப்பு.! மிரள வைக்கும் பேங்க் பேலன்ஸ்..

actress meena
actress meena

Meena Net worth : சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை மீனா இவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருமண விழாவில் பார்த்தார், அப்பொழுது இந்த க்யூட்டான தேவதை போல் இருக்கும் குழந்தை மீனாவை சிவாஜி நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

நெஞ்சங்கள் திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் ரஜினி அங்கிள் என சூப்பர் ஸ்டார் மீது அதிக பிரியம் கொண்ட குட்டிக் குழந்தையாக நடித்த அசத்தியிருந்தார்.

இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மீனா ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் தான் ‘என் ராசாவில் மனசிலே’ இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார், என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் தான் ‘சோலையம்மா’ என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்த ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் மீனா. கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார் மீனா எஜமான், வீர, முத்து என ரஜினிக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்தார் இந்த அனைத்து திரைப்படமும் ஹிட் அடித்தது. அதேபோல் முன்னணி நடிகராக வலம் வரும் கமல், அஜித் ,விஜய் என அனைவரிடமும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது கணவரின் மறைவிற்குப் பிறகு மீள முடியாத துயரத்தில் இருந்த மீனா கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியே வந்தார்.

தற்பொழுது ஜெயா ஜோஸ் ராஜ் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் 47-வது பிறந்த நாளை கொண்டாடும் மீனாவின் சொத்து மதிப்பு பேங்க் பேலன்ஸ் குறித்து தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது மீனாவின் கணவர் வித்யாசாகர் மிகப்பெரிய நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார் அவருக்கு மாதம் சம்பளம் மட்டுமே மூன்று அல்லது நான்கு லட்சம் இருக்கும். எப்படியும் தான் இறந்து விடுவோம் என தெரிந்து கொண்டு மொத்த சொத்துக்களையும் மீனா மற்றும் தன்னுடைய மகள் நைனிகா மீது எழுதி வைத்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் மீனா தொடர்ந்து நடித்துக் கொண்டு இருப்பதால் அந்த பணத்தை அப்படியே பேங்கில் டெபாசிட் செய்து வருகிறாராம் அந்த வகையில் அவரின் முழு சொத்து மதிப்பு சுமார் 35 கோடி முதல் 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.