சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர், நடிகைகள் பருவ வயதை எட்டிய பிறகு சினிமா உலகில் ஹீரோயின்னாகவும், ஹீரோவாகவும் நடிப்பார்கள் அந்த வகையில் நடிகை மீனா ஆரம்பத்தில் சிவாஜி, ரஜினி போன்ற டாப் நடிகரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
பிறகு பருவ வயதை எட்டிய பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவே நடித்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து நடிகை மீனா கமல், சரத்குமார், சத்யராஜ், பிரபு, நவரச நாயகன் கார்த்திக், அஜித் என டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டார்.
தொடர்ந்து சினிமாவில் வெற்றிய ருசித்த இவர் ஒரு கட்டத்தில் வித்தியாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு குடும்ப விஷயத்தில் கவனம் செலுத்தினார் வித்யாசாகர், மீனாவுக்கு நைனிகா என்ற மகள் பிறந்தார் அவர் குழந்தை நட்சத்திரமாக தற்பொழுது பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து சிறு இடைவெளிக்குப் பிறகு நடிகை மீனாவும் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து தற்பொழுது ஒன்று இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை மீனா ஒரு பிளாக்பஸ்டர் படத்தை தவற விட்டுள்ளது குறித்து அவரே சொல்லி உள்ளார்.
நடிகை மீனா பேட்டியில் சொன்னது என்னவென்றால் தேவர்மகன் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க வேண்டியது நான் தான் ஆனால் சில காரணங்களால் அப்பொழுது நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்தார்.