திரை உலகில் போட்டிகள் இருந்தால் தான் அது ஆரோக்கியமாக இருக்கும் என பலரும் சொல்லுகின்றனர் அதுவும் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது சிவாஜி – எம்ஜிஆர், கமல் – ரஜினி தற்போது அஜித் – விஜய் என போட்டி போட்டுக் கொண்டே நடிகர்கள் இருக்கின்றனர்.திரை உலகில் படங்களின் மூலம் போட்டி போட்டுக் கொண்டாலும்..
நிஜ வாழ்க்கையில் அனைவருமே நல்ல நண்பர்களாக தான் இருந்துள்ளனர் அதை இப்பொழுதும் கூட அஜித் விஜய் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் அதை உணர்வதில்லை இவர்கள் இருவருக்கும் ஆகவே ஆகாது இருவரும் எப்பொழுதுமே போட்டி போட்டுக் கொள்கிறார்கள் என நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் – விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. 2003 ஆம் ஆண்டு விஜய் சினேகா, பூமிகா, வடிவேலு, நாசர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் வசீகரா இந்த படத்தை கே செல்வ பாரதி இயக்கிய இருந்தார் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி, செண்டிமெண்ட் அனைத்தும் கலந்த திரைப்படமாக உருவாகியது.
இந்த படத்தில் விஜய் – வடிவேலு காம்போ செம்மையாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது இந்த படத்தில் ஷூட்டிங் நடைபெற்று இருக்கும் போது பக்கத்தில் அஜித்குமாரின் வில்லன் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது இந்த நிலையில் வசீகரா படத்தின் இயக்குனர் செல்வபாரதி ஒரு காட்சியில் நீ பேர் வச்சிக்கிட்டா தான் வில்லன் நான் பேசிக்காவே வில்லன் என விஜயிடம்..
ஒரு வசனத்தை சொல்லி இருக்கிறார் அதற்கு விஜய் இது நல்லா இருக்கு ஆனா உன்ன உதைப்பேன் எங்கள் இருவருள் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் நீங்கள் ஊதிக் கிளப்புகிறீர்களா.. இந்த வசனத்தை வைத்தால் வேண்டுமென்று ஏதோ பிரச்சனை கிளம்புவது போல என கோபமாக கூறினாராம் இதனை சமீபத்தில் கேட்டு ஒன்றில் செல்வ பாரதி ஓபன்னாக சொன்னார்.