maveeran : சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். படம் வருகின்ற 14 ஆம் தேதி கோலாகலமாக வெளியாகிறது படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து சரிதா, யோகி பாபு, அதிதி ஷங்கர், மிஷ்கின் என பல திரைப் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
படம் வெளி பெறுவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாவீரன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன், மிஸ்கின் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் அப்பொழுது பேசிய சிவகார்த்திகேயன்..
படம் ரீலிஸ் -க்கு வரும் போது பதட்டம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த படத்தை உங்களுக்கு காட்ட ஆர்வமாக இருக்கிறேன். இயக்குனர் மடோன் அஸ்வின் சமூக அக்கறையும், சமூக பார்வையும் அதிகம் காண்பிக்க கூடியவர் அந்த வகையில் மாவீரன் திரைப்படத்திலும் சமூக அக்கறை பல இருக்கிறது. ஆனால் பார்வையாளர்களுக்கு கருத்து சொல்லும் வசனங்கள் படத்தில் இல்லை..
ஆனால் படம் முடிந்த பிறகு பலரிடம் கருத்துக்கள் போய் சென்று இருக்கும் என கூறினார் மேலும் பேசிய சிவகார்த்திகேயன்.. இயக்குனர் மிஸ்கின் அவர்களின் அனைத்து படங்களும் என்னுடைய பேவரைட் அவர் ரொம்ப ஸ்டிக்கான ஆள் என நினைக்கிறேன். அவர் ரொம்ப ஸ்வீட். என்னுடைய போன படம் சறுக்கிவிட்டது தோல்விக்கு நான் முழு பொறுப்பேன்.
ஆனால் படம் வெற்றி அடைந்தால் மொத்த குழுவின் உழைப்பால் கிடைப்பது எனக் கூறினார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே ஒரு பக்குவம் வேண்டும் அது உங்களிடம் இருக்கிறது நீங்கள் நிச்சயம் அடுத்தடுத்து நல்ல வெற்றி வெற்றி படங்களை கொடுப்பீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.