சினிமா உலகில் கால்தடம் பதிக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு அந்த திறமையை சரியாக புரிந்து கொண்டு சரியான கதைகளை தேர்ந்தெடுத்தாலே போதும் அவர்கள் முன்னணி நட்சத்திரமாக மாறுவார்கள் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன்.
வெள்ளி திரையில் கால் தடம் பதித்த நாளிலிருந்து இப்பொழுது வரையிலும் கமர்சியல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார். சிவகார்த்திகேயன் படங்களில் பெரிதும் காமெடி ஆக்சன் சென்டிமென்ட் போன்றவை இடம்பெறும் இது ரசிகர்கள் தாண்டி பொதுமக்களுக்கு ரொம்பவே பிடிக்கும் அதனால் தான் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றியை ருசிப்பதற்கான ஃபார்முலாவாக இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக அண்மையில் நடித்த சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளன. டான் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ், மாவீரன் மற்றும் பெயரிடப்படாத ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் இதில் முதலாவதாக பிரின்ஸ் மற்றும் மாவீரன் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என தெரிய வருகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு புதிய கெட்டப்பில் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்ததாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தை மண்டேலா அஸ்வின் இயக்கி வருகிறார். படத்தை அருண் விஷ்வா தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் மாவீரன் படக்குழு டீசரை வெளியிட்டு உள்ளது.
டீசரை பார்க்கும்போது முழுக்க முழுக்க படம் ஆக்சன் நிறைந்த ஒரு திரைப்படமாக இருக்கும் என தெரிய வருகிறது அதே சமயம் சில சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்துரைக்கும் படி இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு புதிய கெட்டபில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் இதோ நீங்களே பாருங்கள் மாவீரன் படத்தில் செம மாசாக இருக்கும் சிவகார்த்திகேயன் இதோ டீசர்.