Aditi shankar : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் டாக்டர் படித்திருந்தாலும் அவருக்கு சினிமாவில் அதிகம் ஆர்வம் இருந்த காரணத்தினால் வேலைக்கு போகாமல் தற்பொழுது படங்களில் நடித்து வருகிறார் முதலில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார்.
முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு மற்றும் நடனம் பெரிய அளவில் வைரலானவை தொடர்பு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவரும் ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு விருந்து கொடுத்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த அதிதி சங்கருக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. உடனே அதிலும் நடிக்க ஓகே சொன்னார்.
படம் இரவு பகல் பார்க்காமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட அண்மையில் சூட்டிங் முடிந்தது. அதனைத் தொடர்ந்து ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாக்காலமாக நடைபெற்றது படம் வருகின்ற 14ஆம் தேதி அதாவது நாளை வெளியாக உள்ளது இந்த படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது.
இந்த படம் மிகப்பெரிய ஒரு சமூக கருத்தை சொல்ல இருக்கிறது என்றும், ஆக்சன்,காமெடி, சென்டிமென்ட் இடம் பெற்றிருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இந்த நிலையில் மாவீரன் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்து தகவல்கள் வெளி வருகின்றன.
அதன்படி சிவகார்த்திகேயன் 5 கோடி சம்பளத்தை குறைத்து இந்த படத்திற்காக 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. நடிகை அதிதி ஷங்கருக்கு மாவீரன் படத்தில் நடிக்க சுமார் 25 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.