வசூல் வேட்டையை நடத்தும் மாவீரன்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

maaveeran
maaveeran

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று ஜூலை 14ஆம் தேதி அன்று மாவீரன் திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் வெளியான முதல் நாள் மாவீரன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் படும் தோல்வியினை பெற்றது. நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.

ரூபாய் 35 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த பாடம் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்து வாழும் ஒரு கோழை மக்களின் பிரச்சினைகளை தட்டி கேட்டால் என்னவாகும் என்பதே இந்த படத்தின் கதை இந்த படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை தந்திருக்கும் நிலையில் அதே போல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி கடைசியாக தனது நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் படம் தோல்வினை அடைந்ததால் மாவீரன் திரைப்படத்தின் மூலம் இழந்த மார்க்கெட்டை பெற வேண்டும் என இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 13 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது மேலும் விடுமுறை நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்திருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பாடி நடனமாடியிருந்த வண்ணாரப்பேட்டை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. அப்படி பிரபலங்கள் முதல் சிறுசுகள் வரை அனைவரும் நடனமாடி சோசியல் மீடியாவில் கலக்கி வருகின்றனர்.