Maaveeran : பிரின்ஸ் படத்தின் தோல்வியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மாவீரன். படம் ஒரு வழியாக கடந்த ஜூலை 14 ஆம் தேதி தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க அநியாயத்தை எதிர்த்து பாட்டு கேட்கும் ஒரு நபராக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
அவருடன் இணைந்து யோகி பாபு, சரிதா, மிஸ்கின், சுனில், அதிதி ஷங்கர் என பல திரைப்படங்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர் இதனால் படம் படம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
அதன் காரணமாக வசூலும் நிக்காமல் அள்ளி வருகிறது இதனால் சந்தோஷமடைந்த மாவீரன் படகுழு அண்மையில் பிரஸ்மீட் வைத்து கேக் வெட்டி கொண்டாடியது அப்பொழுது பேசி சிவகார்த்திகேயன் திரை உலகில் 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன் பல வெற்றி, தோல்வி கொடுத்துள்ளேன் ஆனால் இது ஒரு நல்ல அனுபவமாக நான் பார்க்கிறேன் என கூறினார். மாவீரன் படத்தின் வெற்றி ரொம்ப ஸ்பெஷல் என தெரிவித்தார்.
படத்தின் வசூலால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது இந்த நிலையில் மாவீரன் திரைப்படம் வெளிவந்து இத்துடன் 9 நாட்கள் ஆகியுள்ள நிலையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் மாவீரன் திரைப்படம் இதுவரை உலக அளவில் சுமார் 69 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது தமிழகத்தில் மட்டும் 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
இப்படி தொடர்ந்து நல்ல வசூலை அள்ளும் பட்சத்தில் நிச்சயம் மாவீரன் படம் 100 கோடி கிளப்பில் இணையும் என பலரும் கூறி வருகின்றனர் ஆனால் உண்மையாகவே மாவீரன் திரைப்படம் சுமார் 80 கோடி முதல் 90 கோடி வரை தான் வசூல் செய்யும் என திரை வட்டாரங்கள் கூறுகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..