மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் ஐடி கார்டு இதுதான்.! ஐடி கார்டில் உள்ள பெயரை பார்த்தீர்களா.?

vijay-master
vijay-master

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து விஜய்சேதுபதியும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார், இந்த படத்தில் விஜய் ஒரு கல்லூரிப் பேராசிரியராக நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் இணையதளத்தில் கசிந்துள்ளது, மாஸ்டர் திரைப்படத்தில் முதலில் விஜய்யின் கதாபாத்திரததின் பெயரை படத்தின் தலைப்பாக வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதன்பின்னர், மாஸ்டர் என படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள் படக்குழு.

இந்த நிலையில் இணையதளத்தில் கசிந்த ஐடி கார்டை பார்க்கும் பொழுது இந்த திரைப்படத்தில் விஜய்யின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என தெரியவந்துள்ளது, அதுமட்டுமில்லாமல் அந்த ஐடி கார்டு கல்லூரியின் பெயரோடு வெளியாகியுள்ளது, மேலும் விஜய் இந்த திரைப்படத்தில் மாணவர்களின் டீன் பொறுப்பில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், விஜே ரம்யா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.