மிரட்டலான வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி விஜய்க்கு வாழ்த்து கூறிய மாஸ்டர் மகேந்திரன்.! வைரலாகும் வீடியோ

master-mahenthiran

தளபதி விஜய்(vijay) நேற்று தன்னுடைய 46 வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார், அதனால் அனைத்து சமூக வலைதளத்திலும் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம் தான் நிரம்பி வழிந்தன, ஹோலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து கூறி வந்தார்கள். விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு பாக்கியராஜ், மாஸ்டர் மகேந்திரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், ஏப்ரல் மாதம் திரைக்கு வரவேண்டிய இந்த திரைப்படம் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

விஜய்யின் பிறந்தநாளில் படக்குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்து கூறினார்கள், அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்கள் விஜய்க்கு நடனத்தின் மூலமும், பாடலின் மூலம் வாழ்த்து கூறினார்கள் அந்த வகையில் இளம் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் விஜய்க்கு தனது பிறந்த நாள் வாழ்த்தை ஒரு அதிரடி நடனத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.

vathi coming
vathi coming

மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு வித்தியாசமான முறையில் நடனமாடி ஒரு சிறிய வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவின் கடைசியில் ஆடி முடித்ததும் மூச்சுத்தணறி நிற்கும் மகேந்திரன் அண்ணா இவ்வளவு பிராக்டிஸ் பண்ணியும் எனக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கு பிராக்டிசே பண்ணாமல் நீங்கள் எப்படி ஆடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

நீங்க என்னைக்குமே கிரேட், நான் லவ் யூ சோ மச், ஹேப்பி பர்த்டே, ஆல்வேஸ் மஜாவா இறங்க, என கூறினார், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் மாஸ்டர் மகேந்திரனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மேலும் மகேந்திரன் தன்னுடைய வீட்டில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா எனக்கும் இங்குள்ள இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு பெரிய உத்வேகமாக இருக்கிறீர்கள் நான் உங்களுடன் பணிபுரிந்தேன் என்று பெருமிதம் அடைகிறேன் வெறித்தனமாக மாஸ்டர்க்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.