தளபதி விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார், இவர் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றிருப்பவர், விஜயின் திரை படம் திரையரங்குக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் அந்தளவு ரசிகர்கள் பாலாபிஷேகம், கட்டவுட், மேளதாளம், பட்டாசு என அமர்க்களப் படுத்துவார்கள்.
இந்த நிலையில் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ஆண்ட்ரியா, சாந்தனு, கௌரி கிஷன் என முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வர வேண்டியது இந்த ஊரடங்கு காரணத்தால் படத்தின் ரிலிஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது, இந்த நிலையில் படத்தை OTT இணையதளத்தில் வெளியிடப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் தளபதி விஜய், படத்தை திரையில் மட்டும்தான் ஒளிபரப்ப வேண்டும் நான் ரசிகர்களுக்காக மட்டும்தான் நடிக்கிறேன் அதனால் அவர்கள் திரையில் பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இந்தநிலையில் இந்த திரைப்படம் வருகின்ற 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மாஸ்டர் திரைப்படத்திலிருந்து விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டதிற்கு டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.
இந்நிலையில் டிரைலர் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அப்படியிருக்க இந்த திரைப்படத்தின் டிரைலரை பார்த்த விஜய் சேதுபதி தன்னுடைய முதல் விமர்சனத்தை கூறியுள்ளார், அவர் கூறியதாவது மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டேன் மிகவும் அற்புதமாக வந்துள்ளது கண்டிப்பாக ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் அனைவருக்கும் இந்த ட்ரெய்லர் பிடிக்கும் என தனது முதல் விமர்சனத்தை கூறியுள்ளார்.