தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கௌரி கிஷன், சாந்தனு பாக்கியராஜ், எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளதாக கூறப்படுகிறது, படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து உள்ளார்.
சமீபத்தில் பஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது, இந்த திரைப்படத்தை ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போனது.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் முடிந்தும் டிரைலர் மற்றும் டீசரை வெளியிடாமல் படக்குழு நிறுத்தி வைத்திருந்தார்கள், படத்தை OTT இணையதளத்தில் வெளியிடுவார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மற்றும் மக்களும் ஆவலுடன் இருந்தார்கள் ஆனால் OTT இணையதளத்தில் வெளியாகாது என விஜய் ஆணித்தரமாகக் கூறினார்.
இந்த நிலையில் டீசர், டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள், இந்த நிலையில் படத்தின் டீசர் நவம்பர் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் படக்குழு அறிவித்துள்ளது.
அதனால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.