தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது, மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் அதுமட்டுமில்லாமல் ஆண்ட்ரியா, விஜயசேதுபதி கௌரி கிஷன், சாந்தனு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக அவரே பேட்டியில் கூறியிருந்தார் ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன் மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆளு ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் ஆனால் இவருக்கு தரமணி திரைப்படம் தான் ஏராளமான ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது இவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கமலுடன் விஸ்வரூபம் திரைப்படத்தில் முதல் மட்டும் இரண்டாம் பாகத்தில் நடித்து இருந்தார், அதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை திரைப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த புகழின் உச்சத்திற்கே சென்றார்.
மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் மிக முக்கிய கதாபாத்திரம் எனக் கூறினார், மேலும் கொரோனா இல்லை என்றால் ஏப்ரல் 9ஆம் தேதியே படம் ரிலீசாகி பட்டைய கிளப்பி இருக்கும், தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன, படத்தை வருகிற தீபாவளிக்கு நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் மாஸ்டர் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார் ஆண்ட்ரியா, ஆண்ட்ரியா பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடல் மிகவும் பிடிக்குமென, அதை விஜய்தான் பாடியவர் என்று தெரியாமல் விஜய் இடமே சென்று இந்த பாடல் எனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார்.
இதைக் கேட்ட விஜய் ஏம்மா நீ எல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கியா என மரணமாகி கலாய்த்தார், ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் பேசாமல் இருக்கும் விஜய் சமீபகாலமாக சக நடிகைகளை கிண்டல் செய்து கலகலப்பாகப் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேகரு செத்துட்டாரா என்பதை போல் ஷாக் ஆகி கேட்டுருப்பாரோ ஆண்ட்ரியா.