பிரபல OTT இணையதளத்திற்கு பல கோடிக்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

vijay
vijay

லோகேஷ் கனகராஜ்  கைதி படத்திற்கு பிறகு விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சில மாதங்களுக்கு முன் மாஸ்டர் திரைப்படம்  OTT தளம் அல்லது அமேசான் பிரைம்மில் வெளியாக உள்ளது என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் அதற்கு எதிராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்டோர் இது முற்றிலும் வதந்தி என்று கூறியிருந்தார்கள்.

இதனையடுத்து சினிமா வட்டாரத்தில் இருந்து தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது அந்த தகவல் என்னவென்றால் மாஸ்டர் திரைப்படத்தை ஓட்டிட்டு தளமான நெட்பிளிக்ஸ் தளத்திற்கு மாஸ்டர் திரைப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் பல கோடிக்கு மேல் விற்பனை செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் மாஸ்டர் திரைப்படத்தை OTT தளத்தில் விடலாமா அல்லது  திரையரங்குகளில் மூலமாக வெளியிடலாமா என தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர்கள் முடிவு செய்யவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.