கோடி கோடியாக லாபம் பார்க்க படத்தை இந்த நாளில் ரிலிஸ் செய்ய பலே ஐடியா போட்ட மாஸ்டர் படக்குழு.! கை கொடுக்குமா இந்த மாஸ்டர் பிளான்

vijay
vijay

இளைய தளபதி விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது இப்படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட்டது. வெளிவந்த நாளில் இருந்தே தற்போது வரை ரசிகர் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.

இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் சேதுபதி மாளவிகா மோகனன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் எந்த நாளில் வெளியிட்டால் வசூலில் அதிக லாபம் பெறலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

vijay
vijay

பொதுவாகவே ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியானால் அது வெள்ளிக்கிழமை அன்று தான் இருக்கும் ஆனால் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு 13-ஆம் தேதி புதன்கிழமையில் வெளியாக உள்ளது.

பொங்கல் விடுமுறையை தொடர்ந்து புதன், வியாழன் வெள்ளி என மூன்று நாட்களிலும் திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் அதிகம் படத்தை பார்க்க வருவார்கள்.

மற்றும் சனி ஞாயிறு என இரு நால்களிலும் குடும்பத்தோடு வந்து மக்கள் பார்ப்பார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொண்ட படக்குழுவினர்கள் இந்த நாளில் திரைப்படத்தை வெளியிட்டால் அதிக கோடிக்கணக்கில் லாபம் பெறலாம் என முடிவெடுத்துள்ளது.

இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.