மாஸ்டர் திரைப்படம் என் வாழ்க்கையை புரட்டி போட்டது.! முக்கிய பிரபலம் அதிரடி

master
master

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ஜனவரி 13 அன்று வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றுவரையிலும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகி 33 நாட்கள் ஆகிவிட்டது.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த வாத்தி கம்மிங்,  குட்டி ஸ்டோரி பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் குட்டி ஸ்டோரி பாடல் ரிலீசாகி இன்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது. எனவே #1yearofkuttistory என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. மேதைகளிடமிருந்து கற்றுக் கொண்டதை நினைத்து பெருமை கொள்கிறேன். குட்டி ஸ்டோரி பாடலுக்காகவும்,மாஸ்டர் திரைப்படத்திற்கும் பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றி என கூறியுள்ளார்.