லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக வேண்டியது ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது இந்த நிலையில் வரைவில் திரையரங்கு திறக்கப்படும் என செய்தி கிடைத்துள்ளது.
இதனால் பல திரையரங்க உரிமையாளர்களும் முதலில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை திரையிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள், அப்போதுதான் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் பிரபல தயாரிப்பாளர் கேயார் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, ஏனென்றால் மாஸ்டர் திரைப்படத்தை தற்பொழுது திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் அரபு நாடுகளில் மட்டுமே திரையரங்கு திறக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் மேலும் அரபு நாடுகளில் 30% மக்கள் மட்டுமே திரையரங்கில் பார்க்க முடியும் எனவும் கூறியுள்ளார், அதையும் மீறி தமிழ்நாட்டில் திரையரங்குகள் உடனடியாக திறக்கப்பட்டால் 100 சதவீத மக்கள் திரையரங்குக்கு வருவார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.
இந்த சூழ்நிலை மாறி சாதாரண சூழ்நிலை மாறுவதற்கு இன்னும் குறைந்தது ஆறு மாதங்கள் ஆக வேண்டும் எனவே அவசர அவசரமாக மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட்டால் கொரோனா பாதிப்பை இன்னும் அதிகமாகும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார் இந்த செய்தியை கேள்விப்பட்ட விஜய் கடும் அப்செட்டில் இருந்தார்.
ஆனால் மக்களின் நலனுக்காகவும் ரசிகர்களின் நலனுக்காகவும் தற்பொழுது விஜய் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, ஆனால் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என தெரியவந்துள்ளது.