யூடியூபே இதுவரை எந்த ஒரு நடிகரின் திரைப்படமும் படைக்காத சாதனையை மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் படைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் இணைந்து நடித்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்திலும்.
விஜயின் நண்பன் சஞ்சீவ், சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா பிரச்சனையால் இன்னும் ரிலீசாகாமல் கிடப்பில் இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொரனோ பிரச்சனையால் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது அதனால் OTT வெளியாக இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிச்சயம் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
மேலும் பொங்கல் தினத்திற்கு படத்தை ரிலீஸ் செய்ய மிகவும் தீவிரமாக வேலை செய்து வருகிறது படக்குழு இந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவிற்கு சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பி வைத்தார்கள் படத்தை பார்த்த தணிக்கை குழு யு/எ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.
மேலும் பொங்கல் விருந்தாக இந்த திரைப் படத்தை ரிலீஸ் செய்வதற்கான அனைத்து செயல்களும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கிய நிலையில், ‘விஜய் த மாஸ்டர்’ என்ற பெயரில் பான் இந்தியப் படமாக வெளியாக இருக்கிறது.
மாஸ்டர் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டார்கள் வெளியான சில மணி நேரத்திலேயே பல சாதனைகளை படைத்தது அதுமட்டுமில்லாமல் இன்றுவரை மாஸ்டர் டீசர் சாதனை படைத்து வருகிறது. ஒரே சமயத்தில் ஜனவரி 11 ஆம் தேதி அன்று அனைத்து மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது அதனால் ஒரே சமயத்தில் ஜனவரி 13ஆம் தேதி அன்று அனைத்து மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.