எனக்கா ரைடு கில்லி மாதிரி சொல்லி அடிக்கபோகும் தளபதி விஜய்.!

master d
master d

விஜய் அவர்கள் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த படம் பிகில். இப்படம் பெரும் வெற்றிப் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இப்படம் சுமார் 300 கோடி வசூலித்தது என அறிவித்தனர். இதை தொடர்ந்து வருமான வரித்துறையினர் இப்பொழுது களமிறங்கியுள்ளனர். முதலில் வருமான வரித்துறையினர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20 கிளைகளும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அடுத்ததாக கட்டமாக தளபதி விஜயை வருமான வரித்துறையினர் நாடினர். ஏனென்றால் இதில் படத்தில் அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து அவரிடம் வருமானவரித் துறையினர் சோதனை நடத்த உள்ளதாக தகவல் இருந்த நிலையில் அவரை நாடினர். விஐய் அவர்கள் மாஸ்டர்‌ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் நடித்துக் கொண்டு இருப்பதை அறிந்த வருமான வரிதுறைனர் அந்த இடத்திற்குகே சென்றனர்.

அவரை அங்கு இருந்து அழைத்துக் கொண்டு பனையூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக நடத்திய சோதனையில் ஒன்றும் இல்லாததால் வருமான வரித்துறையினர் திரும்பி சென்றனர்.

இதை தொடர்ந்து வருமான வரி துறையினர் குடைச்சலில் மண்டை சூடான விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை டபுள் மடங்காக மிகவும் வேகமாக  நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என அப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர் இதனை கேட்ட ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ஞ்ச்சில் தளபதி விஜய் அவர்கள் ஒரு குட்டி கதை சொல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர். மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமாகி வருபவர் நடிகர் விஜய். இவரை அரசியல் சூட்சுமத்தில் சிக்க வைக்க சிலர் நினைக்கிறார்கள் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் விஜய் அரசியலில் கால் தடம் பதிப்பார் என எதிர்பார்கிறார்கள்.