இணையதளத்தில் லீக் ஆன மாஸ்டர் திரைப்படத்தின் படபிடிப்பு புகைப்படம்.! இதோ புகைப்படம்

master-vijay-sethupathi-tamil360newz
master-vijay-sethupathi-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தளபதிவிஜய், இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக வேண்டியது ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது.

இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்கள் மேலும் மாஸ்டர் திரைப்படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

கொரனோ லாக் டவுனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தது ஆனால் தற்போது தமிழக அரசு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்ய அனுமதி அளித்துள்ளது, அதனால் மாஸ்டர் திரைப்படத்தில் எடிட்டிங் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது, இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார், இதனை உறுதி செய்யும் விதமாக விஜய் சேதுபதி படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, இந்த புகைப்படம் லீக் ஆனதால் படக்குழு கொஞ்சம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது, மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் விஜயின் பிறந்தநாள் என்பதால்.