தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், கௌரி கிஷன், ஆண்ட்ரியா சஞ்சீவ் சாந்தனு பாக்யராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் ஜனவரி 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்கச் செய்ய ப்ரோமோ வீடியோக்களை படக்குழு ஒவ்வொருநாளும் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் லீக் ஆகி பட குழுவினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது அந்த வீடியோவை பார்த்த படக்குழு உடனடியாக அதை நீக்க அதிரடி நடவடிக்கை எடுத்தார்கள். மேலும் அதனை யார் வெளியிட்டது என சல்லடை போட்டு அலசி பார்த்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
படத்தை விளம்பரத்திற்காக இப்படி ஒரு விஷயத்தை படக்குழுவில் இருந்து யாரோ ஒருவர் தன் இதை செய்துள்ளார்கள் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் படத்தை லீக் செய்ய நினைத்தால் முழு படத்தையும் லிக் செய்திருப்பார்கள் இப்படி துண்டு துண்டு காட்சிகளாக வெளியிட மாட்டார்கள்.
அதனால் படக்குழுவிற்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் இதை செய்திருக்க மாட்டார்கள் என தகவல் கிடைத்துள்ளது. கண்டிப்பாக இதை படக்குழுவில் இருக்கும் யாரோ ஒருவர்தான் இதுபோல் செய்துள்ளார்கள் ஆனால் படக்குழு சத்தியம் செய்யாத குறையாக எப்படி நடந்தது தெரியவில்லை என கூறுகிறார்கள்.
எது எப்படியோ அலசிப் பார்த்தால் படக் குழுவில் இருந்து யாரோ ஒருவர்தான் இந்த வேலையை பார்த்து உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.