தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
கொரோனா காலகட்டத்தில் நீண்ட நாட்களாக எந்த ஒரு திரைப்படமும் ரிலீசாகாமல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கை திறக்கலாம் என அரசு அறிக்கை விடுத்தது. இதனால் நூறு சதவீத பார்வையாளர்கள் கூட இல்லாமல் வெறும் 50 சதவீத பார்வையாளர்களுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்தது.
50 சதவீத பார்வையாளர்களுடன் திரைக்கு வந்தாலும் வசூலில் நூறு கோடி வரை எட்டியுள்ளது என கூறப்படுகிறது. இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் பிரைம் இல் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது என தகவல் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் சன் தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு மாஸ்டர் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது.
இந்தநிலையில் சர்க்கார் திரைப்படம் இதற்கு முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு டிஆர் வியில் முன்னிலையில் இருந்தது அதனைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் திரைப்படம் டிவியில் ஒளிபரப்பினால் டிஆர்பி ரேட்டிங் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.