33 நாளுலையே மாஸ்டர் திரைப்படத்திற்க்கு இவ்வளவு வசூலா!! மகிழ்ச்சியில் படக்குழு..

vijay
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.  இவருக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவரும் எந்த படமாக இருந்தாலும் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று விடும்.

அந்த வகையில் தற்பொழுது விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ம் தேதியன்று தியேட்டரில் ரிலீஸ் ஆனது.

இப்படம் ரிலீசாகி இன்று வரையிலும் 33 நாட்கள் கடந்த நிலையில் இதுவரையிலும் ரூபாய் 11.56 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் நடித்து வசூல் ரீதியாக அதிக வரவேற்பைப் பெற்றிருந்த திரைப்படம் என்றால் தெறி தான் இத்திரைப்படம் 11.5 கோடி வரை வசூல் செய்தது தற்பொழுது அதனை ஓவர்டேக் செய்துள்ளது மாஸ்டர் திரைப்படம்.