பொருளாதார நிதி நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் மாஸ்டர் விநியோகஸ்தருக்கு நடிகர் விஜய் உதவி செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ரிலீசாக வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே போகிறது.
அதனால் மாஸ்டர் திரைப்படத்தை OTT இணையதளத்தில் பெரிய தொகையை மாஸ்டர் திரைப்படம் விலை பேச பட்டதாகவும் ஆனால் நடிகர் விஜய் வேண்டாமென மறுத்துள்ளதாக கூறப்படுகிறது, அதனால் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற வினியோகஸ்தர் லலித் ரிலீஸ் தேதி தள்ளி போனால் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அதனால் பைனான்ஸ் காரர்களுக்கு அதிக வட்டி கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் விஜய் காதிற்கு எப்படியோ போக இந்த இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்ட விஜய், தயாரிப்பாளர் லலித் அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு அவருடைய நிறுவனத்திற்கு ஒரு படத்தை நடித்துத் தர முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தன்னுடைய அடுத்த படத்தை சன் பிக்சர் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துவிட்டு அடுத்த திரைப்படத்தை லலிதா தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது விஜய்யின் இந்த அதிரடி முடிவு ரசிகர்களிடையே கொண்ட வைத்துள்ளது.
தன்னால் யாரும் நஷ்டமடைய வேண்டாமென விஜய் எடுத்துள்ள இந்த முடிவு கோலிவுட் திரைப் பிரபலங்கள் பலரும் புகழ்ந்து வருகிறார்கள்,.