தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆக வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸை தள்ளிப் போய்க் கொண்டே போகிறது.
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நிலையில் படத்தை OTT-யில் ரிலீஸ் ஆகப்போகிறது என பலரும் கூறிய நிலையில் மாஸ்டர் திரைப்படம் OTT-யில் வெளியாகாது எனவும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் மட்டும்தான் ரிலீஸ் ஆகும் எனவும் தயாரிப்பு தரப்பிலிருந்து ஏற்கனவே பலமுறை வெளியானது.
அப்படி இருக்கும் வகையில் நேற்று மாலையில் இருந்து மாஸ்டர் திரைப்படம் OTT-யில் வெளியாக இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகி நிலையில். இதுகுறித்து மாஸ்டர் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பை மீண்டும் அறிவித்துள்ளார்கள்.
அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியதாவது, தற்பொழுது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம், மேலும் மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில் மட்டுமே ரிலிஸ் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
அந்த ஒரு மிகப்பெரிய நாளுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் இந்த திரைப்படம் குறித்து ஏராளமான வதந்திகள் வெளியாகி கொண்டிருப்பது அனைவரும் அறிந்திருப்போம். அதனால் இதனை உறுதிப்படுத்தும் வகையிலும் தெளிவு படுத்தும் வகையிலும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தை OTT யில் ரிலீஸ் செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்த போதும் நாங்கள் திரையரங்கில் மட்டுமே ரிலீஸ் செய்ய விரும்புகிறோம். அதேபோல் மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் காணவே விரும்புகிறார்கள். ஏனெனில் திரையரங்குகள் மீண்டு வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் இதற்கு திரையரங்கு உரிமையாளர்களும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த நிலையில் மாஸ்டர் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புடன் விரைவில் சந்திப்போம் என தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.